நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக கரட் ,போஞ்சி, மிளகாய், கத்தரி ,தக்காளி, பாகற்காய், பயற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் பன்படங்கு அதிகரித்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியாவில் பயிரிடப்பட்ட தக்காளிகள் சேதமடைந்ததன் காரணமாக இவ்வாறு தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் திருநெல்வேலி சந்தையில் தக்காளி 500 ரூபாவாகவும், மருதனார்மடம் சந்தையில் 700 ரூபாவாகவும், சாவகச்சேரி சந்தையில் 650 ரூபாவாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதேவேளை, இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விண்ணை முட்டிய தக்காளி விலை. இல்லத்தரசிகள் அதிர்ச்சி. samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக கரட் ,போஞ்சி, மிளகாய், கத்தரி ,தக்காளி, பாகற்காய், பயற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் பன்படங்கு அதிகரித்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியாவில் பயிரிடப்பட்ட தக்காளிகள் சேதமடைந்ததன் காரணமாக இவ்வாறு தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் திருநெல்வேலி சந்தையில் தக்காளி 500 ரூபாவாகவும், மருதனார்மடம் சந்தையில் 700 ரூபாவாகவும், சாவகச்சேரி சந்தையில் 650 ரூபாவாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.அதேவேளை, இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.