• Nov 24 2024

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநரால் திறந்து வைப்பு...!

Sharmi / Jun 25th 2024, 5:08 pm
image

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று(25) திறந்து வைத்தார்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய  சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கான  தகவல்  தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநரால் திறந்து வைப்பு. பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று(25) திறந்து வைத்தார்.வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய  சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகளுக்கான  தகவல்  தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார்.சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement