• Mar 06 2025

வடமராட்சியில் வர்த்தகத்தை நவீன மயப்படுத்தி சுற்றுலாவிகளை கவரும் வகையில் அமைக்க வேண்டும் - பிரதேச செயலர்!

Chithra / Mar 5th 2025, 2:59 pm
image

 

வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (5) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவர் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

வர்த்தக நடவடிக்கைகள் நவீன மயமாக்கப்பட்டு சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய வர்த்தக நிலையங்களாக வடமராட்சி கிழக்கு வர்த்தக நிலையங்களை மாற்றியமைக்க வேண்டும்.

எமது பிரதேசத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். ஆனால் கடற்கரையை மட்டுமே பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

அவர்கள் தங்கி நின்று அனைத்து வகையான உணவுகளையும் விரும்பி உண்ணுவதற்கான வர்த்தக நிலையங்கள் இங்கு இல்லை. 

எனவே எமது பிரதேச வர்த்தக நிலையங்களை நவீன மயமாக்குவதன் மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்த்து எமது பிரதேச வர்த்தக நிலையங்களை மேம்படுத்த முடியும்.

வர்த்தகர்கள் நியாயமான விலையில் தரமான பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்

நிகழ்வின் இறுதியில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றதுடன் வர்த்தகர் சங்க புதிய தலைவராக யாழ் மருதன் அவர்கள் வர்த்தகர்களால் தெரிவு செய்யப்பட்டதுடன் நிகழ்வில் அதிகளவான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.


வடமராட்சியில் வர்த்தகத்தை நவீன மயப்படுத்தி சுற்றுலாவிகளை கவரும் வகையில் அமைக்க வேண்டும் - பிரதேச செயலர்  வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (5) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெற்றது.இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவர் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,வர்த்தக நடவடிக்கைகள் நவீன மயமாக்கப்பட்டு சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய வர்த்தக நிலையங்களாக வடமராட்சி கிழக்கு வர்த்தக நிலையங்களை மாற்றியமைக்க வேண்டும்.எமது பிரதேசத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். ஆனால் கடற்கரையை மட்டுமே பார்த்துவிட்டு செல்கிறார்கள்.அவர்கள் தங்கி நின்று அனைத்து வகையான உணவுகளையும் விரும்பி உண்ணுவதற்கான வர்த்தக நிலையங்கள் இங்கு இல்லை. எனவே எமது பிரதேச வர்த்தக நிலையங்களை நவீன மயமாக்குவதன் மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்த்து எமது பிரதேச வர்த்தக நிலையங்களை மேம்படுத்த முடியும்.வர்த்தகர்கள் நியாயமான விலையில் தரமான பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்நிகழ்வின் இறுதியில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றதுடன் வர்த்தகர் சங்க புதிய தலைவராக யாழ் மருதன் அவர்கள் வர்த்தகர்களால் தெரிவு செய்யப்பட்டதுடன் நிகழ்வில் அதிகளவான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement