• Mar 06 2025

உணவகங்களில் திடீர் சோதனை; உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! QR மூலம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்

Chithra / Mar 5th 2025, 2:50 pm
image

 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியிலுள்ள உணவகங்கள் இன்று  திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் QR ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் பல்நோக்கு  அபிவிருத்தி உதவியாளர் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன்,

அவ்  உணவகங்களில் கடமை புரியும் ஊழியர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என  பொதுச் சுகாதார பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டமையால் பொதுமக்கள்  தங்களது முறைப்பாடுகளை QR scan செய்வதன் மூலம் உணவகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்  என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் குறிப்பிட்டார்.

இதே வேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது உணவகங்களில் மனித நுகர்வுக்கு  பொருத்தமற்ற முறையில் உணவைக் கையாண்ட  இரண்டு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், 

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  அவ் உணவுப் பண்டங்கள் உணவக உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.


உணவகங்களில் திடீர் சோதனை; உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை QR மூலம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியிலுள்ள உணவகங்கள் இன்று  திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் QR ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் பல்நோக்கு  அபிவிருத்தி உதவியாளர் முதலானோர் கலந்து கொண்டனர்.இதன்போது  மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன்,அவ்  உணவகங்களில் கடமை புரியும் ஊழியர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என  பொதுச் சுகாதார பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது.மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டமையால் பொதுமக்கள்  தங்களது முறைப்பாடுகளை QR scan செய்வதன் மூலம் உணவகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்  என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் குறிப்பிட்டார்.இதே வேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது உணவகங்களில் மனித நுகர்வுக்கு  பொருத்தமற்ற முறையில் உணவைக் கையாண்ட  இரண்டு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  அவ் உணவுப் பண்டங்கள் உணவக உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement