இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், பல்வேறு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவுடன் இங்கிலாந்து வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பின் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப்,
“சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீனாவை புறக்கணிப்பது நடைமுறைக்கு ஒத்துப்போகாதது என வலியுறுத்தினார்.
“இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். கொங்கொங்குடன் இணைத்து பார்க்கும்போது, சீனா இங்கிலாந்தின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்த பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், செல்வத்தை பெருக்கவும் பல புதிய வாய்ப்புகளை நாங்கள் திறந்துவிட்டுள்ளோம்” என ஸ்டார்மர் கூறினார்.
சீனாவுடன் இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்தும் இந்த விஜயம், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சமநிலைகளில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் கவலைகள் மேற்கத்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் அரசியல் முரண்பாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவுடன் வர்த்தகம் ஆபத்தானது – டிரம்ப் எச்சரிக்கை : “மணலில் தலையை புதைக்க முடியாது” – இங்கிலாந்து பிரதமர் பதிலடி இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், பல்வேறு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.இந்நிலையில், சீனாவுடன் இங்கிலாந்து வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பின் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப்,“சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீனாவை புறக்கணிப்பது நடைமுறைக்கு ஒத்துப்போகாதது என வலியுறுத்தினார். “இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். கொங்கொங்குடன் இணைத்து பார்க்கும்போது, சீனா இங்கிலாந்தின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.மேலும், “இந்த பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், செல்வத்தை பெருக்கவும் பல புதிய வாய்ப்புகளை நாங்கள் திறந்துவிட்டுள்ளோம்” என ஸ்டார்மர் கூறினார்.சீனாவுடன் இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்தும் இந்த விஜயம், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சமநிலைகளில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் கவலைகள் மேற்கத்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் அரசியல் முரண்பாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.