• May 10 2025

தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபமீட்ட திட்டமிடும் வர்த்தகர்கள் - கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Chithra / Dec 10th 2024, 8:42 am
image

 

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

மேலும், மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய தேங்காய் இல்லாவிட்டாலும்,  தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபத்தை ஈட்ட ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எனவே, அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

அத்துடன், தேங்காய் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தேங்காய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தையில் ஒரு தேங்காய் 192 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பில் ஒருசில பகுதிகளில் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்னை மரங்களை தாக்கும் ஒரு வகையான தொற்று நோயை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம்.

இருப்பினும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. 

இக்காரணிகளுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் இன்று தேங்காய் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.என்றார்.


 

தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபமீட்ட திட்டமிடும் வர்த்தகர்கள் - கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை  நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.மேலும், மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய தேங்காய் இல்லாவிட்டாலும்,  தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபத்தை ஈட்ட ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.எனவே, அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். அத்துடன், தேங்காய் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தேங்காய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.சந்தையில் ஒரு தேங்காய் 192 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பில் ஒருசில பகுதிகளில் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தென்னை மரங்களை தாக்கும் ஒரு வகையான தொற்று நோயை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம்.இருப்பினும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. இக்காரணிகளுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் இன்று தேங்காய் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.என்றார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now