• Jan 13 2025

வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபாரம் : 3499 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Tharmini / Jan 1st 2025, 11:00 am
image

2024ம் ஆண்டு  வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாணத்தில் 3445 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன்  903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 946 வர்தகர்களிற்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 05 இலட்சத்து 74 ஆயிரத்து 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் 774 விசேட சுற்றுவளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 126 விசேட சுற்றிவளைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபாரம் : 3499 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 2024ம் ஆண்டு  வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.குறிப்பாக வடமாகாணத்தில் 3445 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன்  903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 946 வர்தகர்களிற்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 05 இலட்சத்து 74 ஆயிரத்து 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் 774 விசேட சுற்றுவளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 126 விசேட சுற்றிவளைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement