• Jan 04 2025

“Clean Srilanka” உறுதி மொழியுடன் கடமைகளை ஆரம்பித்த கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்..!

Sharmi / Jan 1st 2025, 10:57 am
image

புதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை பதில் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி ரி.எம்.எம்.  அன்சார் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இன்று(01)   நடைபெற்றது.

நிர்வாக உத்தியோகத்தர்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசியக் கொடியேற்றப்பட்டு  தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் நாட்டுக்காக உயிர் நீர்த்த அனைவரையும் நினைவு கூரும் நிகழ்வு 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்முனை பிரதேச செயலக பல்வேறு பிரிவுகளை சேரந்த  ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இறுதியாக நிர்வாக உத்தியோகத்தர் உரையுடன்  “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

Clean Sri Lanka (தூய்மையான நாடு) எனும் தொனிப்பொருளில் நிர்வாக உத்தியோகத்தர் உரையாற்றினார்.

நாட்டு மக்கள் அனைவரினதும் உள்ளங்கள் புதிய எதிர்பார்ப்புகளுடன் நிரம்பியுள்ள வேளையில், நாம் 2025 ஆம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்.

நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு, சமூக, பொருளாதார அபிவிருத்தி. நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.

"க்ளீன் ஸ்ரீ லங்கா என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.

சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற. ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாக கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அபிமானம் கொண்ட இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் அழகானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், வளமான வாழ்க்கையை அடைவதற்கும். நேர்மையுடனும் ஒரே நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்பதாக சத்தியப் பிரமாணம் செய்கின்றோம்./ உறுதிமொழிகின்றோம் என குறிப்பிட்டார்

மேலும் நிகழ்வில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா நன்றியுரை மேற்கொண்டதுடன் சிற்றுண்டி வைபவத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக கணக்காளர்  கே.எம்.எஸ். அமீர் அலி நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல் ,  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட  சிரேஷ்ட முகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜாபீர் , நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் , மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர்  உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.




“Clean Srilanka” உறுதி மொழியுடன் கடமைகளை ஆரம்பித்த கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள். புதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை பதில் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி ரி.எம்.எம்.  அன்சார் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இன்று(01)   நடைபெற்றது.நிர்வாக உத்தியோகத்தர்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசியக் கொடியேற்றப்பட்டு  தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.மேலும் நாட்டுக்காக உயிர் நீர்த்த அனைவரையும் நினைவு கூரும் நிகழ்வு 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்முனை பிரதேச செயலக பல்வேறு பிரிவுகளை சேரந்த  ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, இறுதியாக நிர்வாக உத்தியோகத்தர் உரையுடன்  “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர். Clean Sri Lanka (தூய்மையான நாடு) எனும் தொனிப்பொருளில் நிர்வாக உத்தியோகத்தர் உரையாற்றினார்.நாட்டு மக்கள் அனைவரினதும் உள்ளங்கள் புதிய எதிர்பார்ப்புகளுடன் நிரம்பியுள்ள வேளையில், நாம் 2025 ஆம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்.நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு, சமூக, பொருளாதார அபிவிருத்தி. நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்."க்ளீன் ஸ்ரீ லங்கா என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற. ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாக கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.அபிமானம் கொண்ட இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் அழகானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், வளமான வாழ்க்கையை அடைவதற்கும். நேர்மையுடனும் ஒரே நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்பதாக சத்தியப் பிரமாணம் செய்கின்றோம்./ உறுதிமொழிகின்றோம் என குறிப்பிட்டார்மேலும் நிகழ்வில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா நன்றியுரை மேற்கொண்டதுடன் சிற்றுண்டி வைபவத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக கணக்காளர்  கே.எம்.எஸ். அமீர் அலி நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல் ,  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட  சிரேஷ்ட முகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜாபீர் , நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் , மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர்  உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement