தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா மூதூர் - பெருவெளி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை (11) காலை மிக சிறப்பாக இடம் பெற்றது.
இதனை மூதூர் - பெருவெளி ஸ்ரீ கதிரேசன் பிள்ளையார் ஆலய நிருவாகமும், ஆனந்தா இளைஞர் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்து.
இதன்போது மாட்டு வண்டில்கள் சோடனை செய்யப்பட்டு பவணியாக நெற்கதிர் இடம்பெறும் இடத்திற்குச் சென்றன. அவ்விடத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் நெல் அறுவடை இடம்பெற்றதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து மாட்டு வண்டில்களில் ஏறி மீண்டும் கோயிலுக்கு வருகை தந்தனர்.
இதனிடையே பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்று பார்ப்போருக்கு விருந்தாக அமைந்திருந்தது.
இவ் புதிர் அறுவடை விழாவில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூதூரில் தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய புதிர் அறுவடை விழா தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா மூதூர் - பெருவெளி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை (11) காலை மிக சிறப்பாக இடம் பெற்றது.இதனை மூதூர் - பெருவெளி ஸ்ரீ கதிரேசன் பிள்ளையார் ஆலய நிருவாகமும், ஆனந்தா இளைஞர் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்து.இதன்போது மாட்டு வண்டில்கள் சோடனை செய்யப்பட்டு பவணியாக நெற்கதிர் இடம்பெறும் இடத்திற்குச் சென்றன. அவ்விடத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இதன் பின்னர் நெல் அறுவடை இடம்பெற்றதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து மாட்டு வண்டில்களில் ஏறி மீண்டும் கோயிலுக்கு வருகை தந்தனர்.இதனிடையே பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்று பார்ப்போருக்கு விருந்தாக அமைந்திருந்தது.இவ் புதிர் அறுவடை விழாவில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.