• Apr 26 2025

மரபுரீதியாக மூடப்பட்டது- பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

Thansita / Apr 26th 2025, 8:08 am
image

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் இரவு மூடப்பட்டது. 

இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

வத்திக்கானில் பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகள்  இடம்பெறவுள்ளது

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை  மரபு ரீதியாக மூடப்பட்டதையடுத்து, புனித பேதுரு பேராலயத்தின் உறுப்பினர்கள் திருவுடல் பேழைக்கு அருகில் இருந்து நல்லடக்கம் இடம்பெறும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மரபுரீதியாக மூடப்பட்டது- பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.மேலும் இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.வத்திக்கானில் பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகள்  இடம்பெறவுள்ளதுபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை  மரபு ரீதியாக மூடப்பட்டதையடுத்து, புனித பேதுரு பேராலயத்தின் உறுப்பினர்கள் திருவுடல் பேழைக்கு அருகில் இருந்து நல்லடக்கம் இடம்பெறும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement