• May 23 2026

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நடுவே சோகம்..! ஜப்பானின் நிலநடுக்கம்!

Chithra / Jan 1st 2026, 8:02 am
image

 ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று இரவு 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.


ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


புத்தாண்டு வருவதற்கு முன்பாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் அச்சமும் கவலையும் ஏற்பட்டது.


இருப்பினும், இதன்போது உயிர்ச்சேதங்களோ அல்லது பாரிய சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நடுவே சோகம். ஜப்பானின் நிலநடுக்கம்  ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று இரவு 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.புத்தாண்டு வருவதற்கு முன்பாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் அச்சமும் கவலையும் ஏற்பட்டது.இருப்பினும், இதன்போது உயிர்ச்சேதங்களோ அல்லது பாரிய சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement