• Apr 18 2026

விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்; இளைஞர் பலி

Chithra / Feb 22nd 2026, 4:21 pm
image


காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 


இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 


சம்பவத்தில் உயிரிழந்தவர் கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார். 


காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் கிந்தோட்டை மற்றும் தடல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


இன்று அதிகாலை ரத்கம, பிந்தாலிய சந்தியில் விபத்துக்குள்ளான தமது நண்பர்கள் இருவரைப் பார்ப்பதற்காக காலி தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இம்மூவரும் இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 


எவ்வாறாயினும், ரத்கம பகுதியில் இடம்பெற்ற அந்த விபத்திலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்; இளைஞர் பலி காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார். காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் கிந்தோட்டை மற்றும் தடல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை ரத்கம, பிந்தாலிய சந்தியில் விபத்துக்குள்ளான தமது நண்பர்கள் இருவரைப் பார்ப்பதற்காக காலி தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இம்மூவரும் இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். எவ்வாறாயினும், ரத்கம பகுதியில் இடம்பெற்ற அந்த விபத்திலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement