• Dec 12 2024

Update: தென்னிலங்கையில் கோர விபத்து; மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு! தாய், தந்தை படுகாயம்

Chithra / Dec 12th 2024, 3:36 pm
image

 தெற்கு அதிவேக வீதியில் 100 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு மகள்மார்  உயிரிழந்துள்ளதாகவும் தாய், தந்தை படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய இரு மகள்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையிலிருந்து பயணித்த கார் ஒன்று முன்னால் பயணித்த லொறி ஒன்றின் பின் புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தாய் , தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுடைய மகள் இன்றைய தினம் (12) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Update: தென்னிலங்கையில் கோர விபத்து; மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு தாய், தந்தை படுகாயம்  தெற்கு அதிவேக வீதியில் 100 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு மகள்மார்  உயிரிழந்துள்ளதாகவும் தாய், தந்தை படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய இரு மகள்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொட்டாவையிலிருந்து பயணித்த கார் ஒன்று முன்னால் பயணித்த லொறி ஒன்றின் பின் புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது காரில் பயணித்த தாய் , தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுடைய மகள் இன்றைய தினம் (12) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement