• Dec 12 2024

கிளிநொச்சியில் மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலுவலகம் திறப்பு !

Tharmini / Dec 12th 2024, 3:35 pm
image

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட கட்டிடம் சம்பிரதாயபூர்வமாக இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம், வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பால் காய்ச்சி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

ஜனவரி மூன்றாம் திகதி முதல் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் .பிரமான அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.





கிளிநொச்சியில் மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலுவலகம் திறப்பு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட கட்டிடம் சம்பிரதாயபூர்வமாக இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம், வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பால் காய்ச்சி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஜனவரி மூன்றாம் திகதி முதல் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் .பிரமான அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement