• May 10 2026

மோசமான வானிலையால் ரயில் சேவைகள் பாதிப்பு!

Chithra / Nov 27th 2025, 9:24 am
image

 

மோசமான வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மரங்கள் முறிந்து விழுந்ததால் கரையோர ரயில் மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


குருணாகல், வெல்லாவ பகுதியில் வடக்கு ரயில் பாதை நீரில் மூழ்கியுள்ளதால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், புத்தளம் பாதையிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


பாதகமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் அனைத்து ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மோசமான வானிலையால் ரயில் சேவைகள் பாதிப்பு  மோசமான வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மரங்கள் முறிந்து விழுந்ததால் கரையோர ரயில் மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.குருணாகல், வெல்லாவ பகுதியில் வடக்கு ரயில் பாதை நீரில் மூழ்கியுள்ளதால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், புத்தளம் பாதையிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பாதகமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் அனைத்து ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement