நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை வரையில் ரயில் சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில் நானுஓயா வரையில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று காலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் பாரிய குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
குப்பை மேடு இடிந்து விழும் போது, உல்லாசப் பயணிகள் இதனைக் கண்டு ரயில் நிலையத்திற்கு அறிவித்த காரணத்தினால், நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது.
சீரற்ற காலநிலையால் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை வரையில் ரயில் சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.மலையக ரயில் பாதையில் நானுஓயா வரையில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை, இன்று காலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் பாரிய குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.குப்பை மேடு இடிந்து விழும் போது, உல்லாசப் பயணிகள் இதனைக் கண்டு ரயில் நிலையத்திற்கு அறிவித்த காரணத்தினால், நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது.