• Nov 27 2024

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு - தொடரும் தேடுதல் பணி

Chithra / Nov 27th 2024, 12:19 pm
image

 

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர்  குறிப்பிட்டார்.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை ஈடுபட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது

தற்போது மீட்கப்பட்ட ஜனாசா  சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி  சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு   இயந்திம்  நேற்று வெள்ள  நீரில் அகப்பட்டு  தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.

பின்னர் கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மீட்புப்பணியில் போது  அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் இந்த விபத்தில் 06  சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் குறித்த  மத்ரஸா மாணவர்கள் இருவர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர்   குறிப்பிட்டார்.

நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.



வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு - தொடரும் தேடுதல் பணி  வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர்  குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை ஈடுபட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளதுதற்போது மீட்கப்பட்ட ஜனாசா  சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி  சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு   இயந்திம்  நேற்று வெள்ள  நீரில் அகப்பட்டு  தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.பின்னர் கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.குறித்த மீட்புப்பணியில் போது  அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.மேலும் இந்த விபத்தில் 06  சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.இந்நிலையில் குறித்த  மத்ரஸா மாணவர்கள் இருவர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர்   குறிப்பிட்டார்.நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement