• Mar 23 2026

சொகுசு பேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மரணம்! வவுனியாவில் அதிர்ச்சிச் சம்பவம்

Chithra / Mar 22nd 2026, 2:38 pm
image


கொழும்பு - வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்தில்  குறித்த நபர் பயணம் செய்துள்ளார்.


இதன்போது பேருந்து இன்று அதிகாலை வவுனியாவை அடைந்த நிலையில் அவரது நிலை தொடர்பாக சந்தேகம் அடைந்த பேருந்து நடத்துநர் மற்றும் சாரதி ஆகியோர் பேருந்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.


அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய அலாவுதீன் என்ற நபரே மரணமடைந்துள்ளார். 

அவர் புத்தளம் பகுதியில் இருந்து குறித்த பேருந்தில் ஏறியதாக கூறப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சொகுசு பேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மரணம் வவுனியாவில் அதிர்ச்சிச் சம்பவம் கொழும்பு - வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்தில்  குறித்த நபர் பயணம் செய்துள்ளார்.இதன்போது பேருந்து இன்று அதிகாலை வவுனியாவை அடைந்த நிலையில் அவரது நிலை தொடர்பாக சந்தேகம் அடைந்த பேருந்து நடத்துநர் மற்றும் சாரதி ஆகியோர் பேருந்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய அலாவுதீன் என்ற நபரே மரணமடைந்துள்ளார். அவர் புத்தளம் பகுதியில் இருந்து குறித்த பேருந்தில் ஏறியதாக கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement