தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் கீழ் புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட 300 நவீன பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் நேரடியாக மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் சார்பில் சென்னை உள்ளிட்ட ஆறு போக்குவரத்து கோட்டங்களுக்காக 300 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 164 டீசல் பேருந்துகளும், 134 சி.என்.ஜி (CNG) பேருந்துகளும் அடங்குகின்றன.
கடந்த 22 ஆம் திகதி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இந்தப் பேருந்துகள், நிர்வாக காரணங்களால் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், இன்று அவற்றின் சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், திருவல்லிக்கேணியிலிருந்து பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29A மாநகரப் பேருந்தில் திடீரென ஏறி பயணம் மேற்கொண்டார்.
பயணத்தின் போது பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை நேரில் சந்தித்த முதலமைச்சர், அவர்களின் பணியைப் பாராட்டினார். மேலும் நடத்துனரிடமிருந்து முறையாக பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட அவர், நடத்துனரைத் தனது அருகில் அமரச் செய்து சேவையின் தரம், பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் சாரதியின் அருகாமையில் உள்ள முன் இருக்கையில் அமர்ந்து வீடியோ எடுத்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்து சாரதி, நடத்துநர்கள் மற்றும் மக்களுக்கு கை அசைத்தப்படி சென்றார்.
இதன்போது, “பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் கனவு” என முதல்வர் தன்னிடம் தெரிவித்ததாக நடத்துநர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மேலும், புதிய பேருந்துகளை சேவையில் இணைத்த பின்னர் முதல்வர் விஜய் தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அது மிகவும் மகிழ்ச்சியளித்ததாகவும் சாரதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
“முதல்வர் பேருந்தில் ஏறியவுடன் ஆரம்பத்தில் பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் எனது அருகில் அமர்ந்து இயல்பாக பேசிய பிறகு மிகவும் சந்தோஷமாக இருந்தது” எனவும் சாரதி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
முதலமைச்சர் ஒருவர் அரச பேருந்தில் சாதாரண பயணியாகப் பயணம் செய்து, பொதுமக்களின் அனுபவங்களையும் போக்குவரத்து ஊழியர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிந்தமை, அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“பேருந்தில் பயணிப்பது என் நீண்டநாள் கனவு” - நடத்துநரிடம் பகிர்ந்த முதல்வர் விஜய் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் கீழ் புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட 300 நவீன பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் நேரடியாக மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் சார்பில் சென்னை உள்ளிட்ட ஆறு போக்குவரத்து கோட்டங்களுக்காக 300 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 164 டீசல் பேருந்துகளும், 134 சி.என்.ஜி (CNG) பேருந்துகளும் அடங்குகின்றன.கடந்த 22 ஆம் திகதி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இந்தப் பேருந்துகள், நிர்வாக காரணங்களால் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், இன்று அவற்றின் சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், திருவல்லிக்கேணியிலிருந்து பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29A மாநகரப் பேருந்தில் திடீரென ஏறி பயணம் மேற்கொண்டார்.பயணத்தின் போது பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை நேரில் சந்தித்த முதலமைச்சர், அவர்களின் பணியைப் பாராட்டினார். மேலும் நடத்துனரிடமிருந்து முறையாக பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட அவர், நடத்துனரைத் தனது அருகில் அமரச் செய்து சேவையின் தரம், பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான குறைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும் சாரதியின் அருகாமையில் உள்ள முன் இருக்கையில் அமர்ந்து வீடியோ எடுத்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்து சாரதி, நடத்துநர்கள் மற்றும் மக்களுக்கு கை அசைத்தப்படி சென்றார்.இதன்போது, “பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் கனவு” என முதல்வர் தன்னிடம் தெரிவித்ததாக நடத்துநர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.மேலும், புதிய பேருந்துகளை சேவையில் இணைத்த பின்னர் முதல்வர் விஜய் தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அது மிகவும் மகிழ்ச்சியளித்ததாகவும் சாரதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.“முதல்வர் பேருந்தில் ஏறியவுடன் ஆரம்பத்தில் பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் எனது அருகில் அமர்ந்து இயல்பாக பேசிய பிறகு மிகவும் சந்தோஷமாக இருந்தது” எனவும் சாரதி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.முதலமைச்சர் ஒருவர் அரச பேருந்தில் சாதாரண பயணியாகப் பயணம் செய்து, பொதுமக்களின் அனுபவங்களையும் போக்குவரத்து ஊழியர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிந்தமை, அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.