திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர், உயிர்மாய்த்து உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து அவரது சடலம் உடலில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டது.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது உயிர்மாய்த்துக் கொண்டாரா? மற்றும் இது ஒரு அனர்த்தமா என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு தடவைகள் இந்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை. இந்த நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த சடலத்தை நீதித்துறை மருத்துவ ஆலோசகர்களால் நியமிக்கப்பட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் அனைத்துக் காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், மரணம் உயிர்மாய்ப்பால் ஏற்பட்டது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திறைசேரி அதிகாரி உயிர்மாய்ப்பு - மருத்துவ அறிக்கையில் உறுதி திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர், உயிர்மாய்த்து உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து அவரது சடலம் உடலில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிர்மாய்த்துக் கொண்டாரா மற்றும் இது ஒரு அனர்த்தமா என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. இதேவேளை, இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு தடவைகள் இந்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை. இந்த நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். உயிரிழந்த சடலத்தை நீதித்துறை மருத்துவ ஆலோசகர்களால் நியமிக்கப்பட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் அனைத்துக் காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், மரணம் உயிர்மாய்ப்பால் ஏற்பட்டது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.