• Oct 07 2026

வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்தது – மீண்டும் CID பொறுப்பில் சுரேஷ் சலே

Chithra / Oct 6th 2026, 3:30 pm
image


அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்துள்ள நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, சுரேஷ் சலே இன்று மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


சுரேஷ் சலே தற்போது CIDயின் காவலில் உள்ள நிலையில், உடல்நலக் காரணங்களால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.


மருத்துவக் குழாமின் பரிந்துரையின் அடிப்படையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்தது – மீண்டும் CID பொறுப்பில் சுரேஷ் சலே அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்துள்ள நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, சுரேஷ் சலே இன்று மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சுரேஷ் சலே தற்போது CIDயின் காவலில் உள்ள நிலையில், உடல்நலக் காரணங்களால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவக் குழாமின் பரிந்துரையின் அடிப்படையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement