• Sep 20 2024

கிளிநொச்சியில் வெட்டி வீழ்த்தப்படவுள்ள மரங்கள்...! அனுமதிக்காக காத்திருப்பு...!samugammedia

Sharmi / Oct 26th 2023, 11:19 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் அகற்றப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ்ஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மின் விநியோகம், பிரதேசத்துக்கான மின் விநியோகம் இடம்பெறுவதுடன், அதிக மக்கள் பயன்பாட்டு வீதியாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், மேற்குறித்த விடயங்களிற்கு ஆபத்தாக காணப்பட்ட மரமே இவ்வாறு அகற்றப்பட்டது.

அரசாங்க மரக் கூட்டுத்தாபன கிளிநொச்சி உதவி பிரதேச முகாமையாளர், ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இடர்முகாமைத்துவப் பிரிவினர், கரைச்சி பிரதேச சபையினரும் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த மரம் அகற்றப்பட்டது.

கிளிநொச்சி நகரில் மேலும் 29 ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினர் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் வெட்டி வீழ்த்தப்படவுள்ள மரங்கள். அனுமதிக்காக காத்திருப்பு.samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் அகற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ்ஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.குறித்த வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மின் விநியோகம், பிரதேசத்துக்கான மின் விநியோகம் இடம்பெறுவதுடன், அதிக மக்கள் பயன்பாட்டு வீதியாகவும் அமைந்துள்ளது.இந்த நிலையில், மேற்குறித்த விடயங்களிற்கு ஆபத்தாக காணப்பட்ட மரமே இவ்வாறு அகற்றப்பட்டது.அரசாங்க மரக் கூட்டுத்தாபன கிளிநொச்சி உதவி பிரதேச முகாமையாளர், ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இடர்முகாமைத்துவப் பிரிவினர், கரைச்சி பிரதேச சபையினரும் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த மரம் அகற்றப்பட்டது.கிளிநொச்சி நகரில் மேலும் 29 ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement