• Sep 20 2024

இலங்கையில் சாரதிகளின் கவனக்குறைவால் பறிபோன 115 சிறுவர்களின் உயிர்..! samugammedia

Chithra / Oct 26th 2023, 11:26 am
image

Advertisement

 

இந்த ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டில் 2,539 வீதி விபத்துகள் பதுவாகியுள்ளன. அத்துடன் இந்த வருடம் 10/15/2023 வரை 1,790 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 

இதில் 18 வயதுக்குட்பட்ட 129 பேர் உயிரிழந்தனர்.  அதேநேரம் 115 சிறுவர்களையும் இழந்துள்ளோம். இது மிகப் கவலைக்குரிய விடயமாகும். என்றார்.

இலங்கையில் சாரதிகளின் கவனக்குறைவால் பறிபோன 115 சிறுவர்களின் உயிர். samugammedia  இந்த ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.2022ஆம் ஆண்டில் 2,539 வீதி விபத்துகள் பதுவாகியுள்ளன. அத்துடன் இந்த வருடம் 10/15/2023 வரை 1,790 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 வயதுக்குட்பட்ட 129 பேர் உயிரிழந்தனர்.  அதேநேரம் 115 சிறுவர்களையும் இழந்துள்ளோம். இது மிகப் கவலைக்குரிய விடயமாகும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement