• May 20 2024

மதுவரித் திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்த வடக்கு மாகாண ஆளுநர்...!samugammedia

Sharmi / Oct 26th 2023, 11:51 am
image

Advertisement

யாழில் மதுவரி திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது மதுவரிதிணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர்,  சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதுடன் நீங்கள் இவ்வாறு சட்ட விரோத மதுபானசாலைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானத்தினை இழக்க செய்கின்றீர்கள் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்த கூட்டத்திற்கு கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர் வருவதில்லை உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகின்றார்.

எனவே சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விபரத்துடன் வரவேண்டும் எனவும் பணித்துள்ளார்.




மதுவரித் திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்த வடக்கு மாகாண ஆளுநர்.samugammedia யாழில் மதுவரி திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது மதுவரிதிணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர்,  சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதுடன் நீங்கள் இவ்வாறு சட்ட விரோத மதுபானசாலைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானத்தினை இழக்க செய்கின்றீர்கள் எனவும் தெரிவித்தார்.அத்தோடு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்த கூட்டத்திற்கு கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர் வருவதில்லை உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகின்றார்.எனவே சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விபரத்துடன் வரவேண்டும் எனவும் பணித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement