திருகோணமலை மாணவர் படுகொலைக்காக நீதி கோரி போராடி உயிர்நீத்த வைத்தியர் மனோகரனுக்கான நினைவுதின நிகழ்வு, சனிக்கிழமை (27) மாலை திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு தை மாதம் 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் வைத்தியர் மனோகரனின் மகனும் ஒருவர்.
குறித்த படுகொலைக்கான நீதியைக் கோரி சர்வதேச ரீதியிலும் போராடி வந்த வைத்தியர் மனோகரன் வயது மூப்பின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) லண்டனில் காலமானார்.
அவருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) குறித்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் உட்பட சட்டத்தரணி சுமந்திரன் சி.பி.ஏ நிறுவனத்தின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வைத்தியர் மனோகரனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மாணவர் படுகொலைக்கு நீதி வேண்டி உயிர்நீத்த வைத்தியருக்கு அஞ்சலி திருகோணமலை மாணவர் படுகொலைக்காக நீதி கோரி போராடி உயிர்நீத்த வைத்தியர் மனோகரனுக்கான நினைவுதின நிகழ்வு, சனிக்கிழமை (27) மாலை திருகோணமலையில் இடம்பெற்றது.திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு தை மாதம் 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் வைத்தியர் மனோகரனின் மகனும் ஒருவர். குறித்த படுகொலைக்கான நீதியைக் கோரி சர்வதேச ரீதியிலும் போராடி வந்த வைத்தியர் மனோகரன் வயது மூப்பின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) லண்டனில் காலமானார். அவருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) குறித்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் உட்பட சட்டத்தரணி சுமந்திரன் சி.பி.ஏ நிறுவனத்தின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வைத்தியர் மனோகரனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.