கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து 31 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்லில் இன்று பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
விஜயின் பிரசாரத்தைக் காண பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என மக்கள் படையெடுத்துச் சென்றுள்ளனர்.
விஜயின் வாகனத்தை நெருங்கி மக்கள் செல்லச் செல்ல இடம் போதாமையில் கூட்டம் நெரிசலடைந்தது. நெரிசலில் பலர் சிக்கித்தவித்துள்ளனர்.
நெரிசல் காரணமாக பல பெண்கள், முதியவர்கள் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் அம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் பலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு மக்கள் அதிகரித்துள்ளதால் அருகிலுள்ள மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் கரூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பிரச்சாரத்தில் சிக்கித்தவித்து மக்கள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் கரூர் பகுதி தற்போது பரபரப்பாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் சிக்கித்தவித்த மக்கள்; 31 பேர் உயிரிழப்பு பலர் கவலைக்கிடம் கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து 31 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல்லில் இன்று பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். விஜயின் பிரசாரத்தைக் காண பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என மக்கள் படையெடுத்துச் சென்றுள்ளனர். விஜயின் வாகனத்தை நெருங்கி மக்கள் செல்லச் செல்ல இடம் போதாமையில் கூட்டம் நெரிசலடைந்தது. நெரிசலில் பலர் சிக்கித்தவித்துள்ளனர். நெரிசல் காரணமாக பல பெண்கள், முதியவர்கள் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் அம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் பலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு மக்கள் அதிகரித்துள்ளதால் அருகிலுள்ள மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் கரூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பிரச்சாரத்தில் சிக்கித்தவித்து மக்கள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் கரூர் பகுதி தற்போது பரபரப்பாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.