ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) காலை நடைபெற்றது.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவினால்(Shigeru ISHIBA) மகத்தான வரவேற்பு அளிககப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், அந்த அணிவகுப்பை பார்வையிடவும் இணைந்தார்.
இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பமானது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நெருங்கிய நட்புறவைத் தொடர்ந்து பலப்படுத்தி, இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக,முதலீடு, பொருளாதார, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் பல்வேறுபட்ட துறைகளிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பரவலாக்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியை (Official Development Assistance) தொடர்ந்தும் பிரதிபலிக்கும் வகையில், பால் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் (Project for the Enhancement of Productivity in the Dairy Sector) மற்றும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி(Official Security Assistance- OSA) திட்டம் குறித்த பரிமாற்று ஆவணம் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர - ஜப்பான் பிரதமர் இடையே சந்திப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) காலை நடைபெற்றது.ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவினால்(Shigeru ISHIBA) மகத்தான வரவேற்பு அளிககப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், அந்த அணிவகுப்பை பார்வையிடவும் இணைந்தார்.இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பமானது.ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நெருங்கிய நட்புறவைத் தொடர்ந்து பலப்படுத்தி, இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக,முதலீடு, பொருளாதார, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் பல்வேறுபட்ட துறைகளிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பரவலாக்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியை (Official Development Assistance) தொடர்ந்தும் பிரதிபலிக்கும் வகையில், பால் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் (Project for the Enhancement of Productivity in the Dairy Sector) மற்றும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி(Official Security Assistance- OSA) திட்டம் குறித்த பரிமாற்று ஆவணம் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.