• Sep 30 2025

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக; தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது

Chithra / Sep 30th 2025, 9:52 am
image

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்றது.

இதில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் உட்பட 41 பேர் பலியாகினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் நேற்று   கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.


கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். 

இதேவேளை தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.


ஆட்டத்தை ஆரம்பித்த திமுக; தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்றது.இதில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் உட்பட 41 பேர் பலியாகினர்.குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.அதனடிப்படையில் நேற்று   கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement