இலங்கையின் வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவான் கொட்டி பகுதியில் பல வெடி குண்டுகள் கண்பிடிக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், நேற்றையதினம் காலை 11.30 மணியளவில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தற்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி , இப் பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசம் முழுவதும் மனிதாபிமான கன்னி வெடி அகற்றுதல் எனும் தொனிப்பொருளில் வெடிகுண்டுகள் முன்னதாக அகற்றப்பட்டிருந்தது.
ஆனாலும் நேற்றையதினம் குண்டு வெடித்த சம்பவமும் இன்று வெடி குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவமும் அங்கு வாழும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவ் தொண்டு நிறுவனம் தமது பணியினை ஒழுங்காக செய்து இருந்தால் இவ்வாறான பாரியளவு விபத்துக்கள் ஏற்பட்டு இருக்காது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை; கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டுகள் இலங்கையின் வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவான் கொட்டி பகுதியில் பல வெடி குண்டுகள் கண்பிடிக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், நேற்றையதினம் காலை 11.30 மணியளவில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தற்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி , இப் பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசம் முழுவதும் மனிதாபிமான கன்னி வெடி அகற்றுதல் எனும் தொனிப்பொருளில் வெடிகுண்டுகள் முன்னதாக அகற்றப்பட்டிருந்தது.ஆனாலும் நேற்றையதினம் குண்டு வெடித்த சம்பவமும் இன்று வெடி குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவமும் அங்கு வாழும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ் தொண்டு நிறுவனம் தமது பணியினை ஒழுங்காக செய்து இருந்தால் இவ்வாறான பாரியளவு விபத்துக்கள் ஏற்பட்டு இருக்காது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.