ஜப்பானிய வணிகத் தலைவர்களுடனான வட்டமேசை கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இஷிகுரோ நோரிஹிகோ (Ishiguro Norihiko) மற்றும் ஜப்பான்- இலங்கை வணிக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவர் ஃபுமிஹிகோ கபயாஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வின் போது, இலங்கையில் கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளிகளில் ஒன்றான இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது இரண்டு நாடுகளுக்கும் அத்தகைய ஒத்துழைப்பை கொண்டு வரும் பரஸ்பர நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஜப்பானிய வணிகத் தலைவர்களுடனான வட்டமேசை கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இஷிகுரோ நோரிஹிகோ (Ishiguro Norihiko) மற்றும் ஜப்பான்- இலங்கை வணிக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவர் ஃபுமிஹிகோ கபயாஷி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமர்வின் போது, இலங்கையில் கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளிகளில் ஒன்றான இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் அத்தகைய ஒத்துழைப்பை கொண்டு வரும் பரஸ்பர நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.