தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிராமப்புற வீதி புனரமைப்பிற்காக செட்டிக்குளம் பிரதேச சபைக்கு அனுப்பிய 46 மில்லியன் ரூபா நிதியினை பிரதேச சபை திருப்பி அனுப்பியுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று வவுனியா நகரில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்திற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்திலே வீதிகளை புனரமைப்பதற்காக 1200 மில்லியன் ரூபாவும், அதனை விட மேலதிகமாக 113 மில்லியன் ரூபா, ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எங்களது வேண்டு கோளிற்கு அமைவாக 200 மில்லயன் ரூபா கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிதிகள் அனைத்துமே பிரதேச சபைகளிற்கு பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறுதியாக கிடைக்கப்பெற்ற 200 மில்லியன் ரூபா நிதி கிரவல் வீதிகளை அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது வவுனியா மாவட்டத்திலே காணப்படுகின்ற அனைத்து பிரதேச சபைகளிற்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆந்த வகையிலே செட்டிக்குளம் பிரதேச சபைக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக 46 வீதிகளை புனரமைப்பதற்காக 46 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தினால், பிரதேச செயலகம் ஊடாக கடந்த 18ம் திகதி செட்டிக்குளம் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வன்னி பிரதேசத்திலே நீண்ட காலமாக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே தங்களது பொக்குவரத்து நடவடிக்கைகளை செய்திருந்தனர்.
இதனை கருத்திற்கொண்டு எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது விசேடமாக வடமாகாணத்தில் பாதைகளை புனரமைப்பதற்கான நிதியினை ஒதுக்கியிருந்தோம்.
இறுதியாக வந்த 200 மில்லியன் ரூபாவிலே 46 மில்லியன் ரூபா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட போதும் குறித்த பிரதேச சபை தவிசாளர் குறித்த நிதியை ஏற்க முடியாது என்ற ரீதியிலும், இவ்வேலைத்திட்டத்தை செய்ய முடியாது என்ற ரீதியிலும் பிரதேச செயலகத்திற்கு அறிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேட்ட போது தான் அவ்வாறு செயற்படவி;ல்லை எனவும், தனக்கு இந்நிதி வந்ததே தெரியாது என்ற வகையிலே தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக ஆராய்ந்த போது தவிசாளரே கையொப்பமிட்டு குறித்த கடிதத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
வீதி புனரமைப்புக்கான அரசு ஒதுக்கிய 46மில்லியன் ரூபா நிதியை திருப்பி அனுப்பிய செட்டிக்குளம் பிரதேச சபை - பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிராமப்புற வீதி புனரமைப்பிற்காக செட்டிக்குளம் பிரதேச சபைக்கு அனுப்பிய 46 மில்லியன் ரூபா நிதியினை பிரதேச சபை திருப்பி அனுப்பியுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.இன்று வவுனியா நகரில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா மாவட்டத்திற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்திலே வீதிகளை புனரமைப்பதற்காக 1200 மில்லியன் ரூபாவும், அதனை விட மேலதிகமாக 113 மில்லியன் ரூபா, ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எங்களது வேண்டு கோளிற்கு அமைவாக 200 மில்லயன் ரூபா கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிதிகள் அனைத்துமே பிரதேச சபைகளிற்கு பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறுதியாக கிடைக்கப்பெற்ற 200 மில்லியன் ரூபா நிதி கிரவல் வீதிகளை அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது வவுனியா மாவட்டத்திலே காணப்படுகின்ற அனைத்து பிரதேச சபைகளிற்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆந்த வகையிலே செட்டிக்குளம் பிரதேச சபைக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக 46 வீதிகளை புனரமைப்பதற்காக 46 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட செயலகத்தினால், பிரதேச செயலகம் ஊடாக கடந்த 18ம் திகதி செட்டிக்குளம் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வன்னி பிரதேசத்திலே நீண்ட காலமாக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே தங்களது பொக்குவரத்து நடவடிக்கைகளை செய்திருந்தனர். இதனை கருத்திற்கொண்டு எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது விசேடமாக வடமாகாணத்தில் பாதைகளை புனரமைப்பதற்கான நிதியினை ஒதுக்கியிருந்தோம்.இறுதியாக வந்த 200 மில்லியன் ரூபாவிலே 46 மில்லியன் ரூபா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட போதும் குறித்த பிரதேச சபை தவிசாளர் குறித்த நிதியை ஏற்க முடியாது என்ற ரீதியிலும், இவ்வேலைத்திட்டத்தை செய்ய முடியாது என்ற ரீதியிலும் பிரதேச செயலகத்திற்கு அறிவித்திருந்தார்.மேலும் இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேட்ட போது தான் அவ்வாறு செயற்படவி;ல்லை எனவும், தனக்கு இந்நிதி வந்ததே தெரியாது என்ற வகையிலே தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக ஆராய்ந்த போது தவிசாளரே கையொப்பமிட்டு குறித்த கடிதத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.