இந்தியா - தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர்.
அதேநேரம் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, உடற்கூராய்வு நிறைவடைந்த சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“இதயம் நொறுங்கிப் போய் இருக்கின்றேன்.
தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்களையும் மற்றும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், 'கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மரணமடைந்துள்ளனர்.
இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றது.
தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக அமைந்த இந்நாளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் புது திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்
ஒருவர் மரணமடைந்த போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் அல்லு அர்ஜுனா கைது செய்யப்பட்டார்.
இதைபோல், சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாக
இருந்த பிரச்சார கூட்டத்தின் கதாநாயகனான நடிகர் விஜய் கைது செய்யப்பட்டு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கரூர் பிரசார கூட்ட விவகாரத்திற்கு திமுக கட்சியினரே காரணம் என தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, விஜயின் பெயரைக் கெடுப்பதற்கு திமுக கட்சியினர் இந்த அராஜக செயலை செய்துள்ளனர் எனவும் விஜய்க்கு ஆதரவாக வந்த தொண்டர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மக்களின் உயிரை வைத்து அரசியல் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை நாட்டில் இல்லாதொழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, திமுகவினர் உயிரை எடுத்து அரசியல் பண்ண வேண்டும் என நினைத்தால் மக்கள் அதற்கான தீர்வை தருவார்கள் எனவும் விஜயின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மக்களிற்கு பாதுகாப்பிற்கு கொடுக்க கூட அரசாங்கத்திற்கு துணிச்சல் இல்லை எனவும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் செய்தி கவலையளிக்கிறது என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில்
கரூரில் நடந்திருக்கக்கூடிய இந்த கொடுரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு சோகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி விவரமாக சொல்வதற்கு மனது இடம் கொடுக்கவில்லை.
கனத்த இதயத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்.
கரூரில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. செய்தி கிடைத்த உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டறிந்தேன்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.
ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இது வரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாதது.
இறந்துபோன உயிர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுவது கூறுவது என்பது தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.
அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கரூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கைது செய்யப்படுவாரா விஜய் தமிழகத்தில் தொடரும் பதற்றம் இந்தியா - தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர். அதேநேரம் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, உடற்கூராய்வு நிறைவடைந்த சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இதயம் நொறுங்கிப் போய் இருக்கின்றேன்.தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் மற்றும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த அறிக்கையில், 'கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மரணமடைந்துள்ளனர்.இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றது.தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக அமைந்த இந்நாளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.அண்டை மாநிலமான ஆந்திராவில் புது திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் மரணமடைந்த போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் அல்லு அர்ஜுனா கைது செய்யப்பட்டார்.இதைபோல், சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாக இருந்த பிரச்சார கூட்டத்தின் கதாநாயகனான நடிகர் விஜய் கைது செய்யப்பட்டு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கரூர் பிரசார கூட்ட விவகாரத்திற்கு திமுக கட்சியினரே காரணம் என தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.அத்தோடு, விஜயின் பெயரைக் கெடுப்பதற்கு திமுக கட்சியினர் இந்த அராஜக செயலை செய்துள்ளனர் எனவும் விஜய்க்கு ஆதரவாக வந்த தொண்டர்கள் கூறியுள்ளனர்.மேலும், மக்களின் உயிரை வைத்து அரசியல் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை நாட்டில் இல்லாதொழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு, திமுகவினர் உயிரை எடுத்து அரசியல் பண்ண வேண்டும் என நினைத்தால் மக்கள் அதற்கான தீர்வை தருவார்கள் எனவும் விஜயின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.மேலும், மக்களிற்கு பாதுகாப்பிற்கு கொடுக்க கூட அரசாங்கத்திற்கு துணிச்சல் இல்லை எனவும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கரூர் செய்தி கவலையளிக்கிறது என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில் கரூரில் நடந்திருக்கக்கூடிய இந்த கொடுரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு சோகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி விவரமாக சொல்வதற்கு மனது இடம் கொடுக்கவில்லை.கனத்த இதயத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்.கரூரில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. செய்தி கிடைத்த உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டறிந்தேன்.கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இது வரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாதது.இறந்துபோன உயிர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுவது கூறுவது என்பது தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.