• Nov 26 2024

கனடாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் உயர் பொலிஸ் அதிகாரிக்கு முள்ளியவளையில் அஞ்சலி!

Tamil nila / Jun 15th 2024, 9:20 pm
image

ஈழத்தை சேர்ந்தவரும், கனடாவில் உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும், இன்றையதினம்  பிற்பகல் முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு முள்ளியவளை கிராமத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துவந்த பாெலிஸ் அதிகாரி விஜயாலயன் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்திருந்தார். 

அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நாவற்காட்டு பகுதியில் இலவச மாலை நேர வகுப்பு நடைபெறும் மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, விஜயாலயன் அறக்கட்டளை மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கு அவரின் நினைவாக மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் விஜயாலயனின் அம்மம்மாவினால் முதல் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து நினைவு சுடரினை நாவற்காட்டு கிராமத்தின் மூத்தவரால் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை கல்வி நிலைய பொறுப்பாசிரியர்களாலும் சுடர் ஏற்றப்பட்டிருந்தது. 

அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று மலர்மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை மாலை நேர வகுப்பு மாணவர்களால் அவர் நினைவாக கவிதை, பாடல் இடம்பெற்று மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டிருந்ததோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அவரின் உயிர் பிரிந்தாலும் அவர் வாழும் முகமாக விஜயாலயன் அறக்கட்டளையை நிறுவி வறிய மாணவர்களுக்கான இலவச மாலைநேர வகுப்பினையும், கற்பதற்கான உதவிகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது. 




கனடாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் உயர் பொலிஸ் அதிகாரிக்கு முள்ளியவளையில் அஞ்சலி ஈழத்தை சேர்ந்தவரும், கனடாவில் உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும், இன்றையதினம்  பிற்பகல் முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது.முல்லைத்தீவு முள்ளியவளை கிராமத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துவந்த பாெலிஸ் அதிகாரி விஜயாலயன் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்திருந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நாவற்காட்டு பகுதியில் இலவச மாலை நேர வகுப்பு நடைபெறும் மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, விஜயாலயன் அறக்கட்டளை மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கு அவரின் நினைவாக மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் விஜயாலயனின் அம்மம்மாவினால் முதல் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து நினைவு சுடரினை நாவற்காட்டு கிராமத்தின் மூத்தவரால் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை கல்வி நிலைய பொறுப்பாசிரியர்களாலும் சுடர் ஏற்றப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று மலர்மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை மாலை நேர வகுப்பு மாணவர்களால் அவர் நினைவாக கவிதை, பாடல் இடம்பெற்று மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டிருந்ததோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.அவரின் உயிர் பிரிந்தாலும் அவர் வாழும் முகமாக விஜயாலயன் அறக்கட்டளையை நிறுவி வறிய மாணவர்களுக்கான இலவச மாலைநேர வகுப்பினையும், கற்பதற்கான உதவிகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது. 

Advertisement

Advertisement

Advertisement