திருகோணமலையில் கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். சீ. சபறுள்ளா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நீமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (06)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இம்மாதம் ஒகஸ்ட் 5ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
இந்த செய்தியை வெளியிட்ட அதே நிறுவனம் எங்களது மறுப்பறிக்கையினை அதே முன் பக்கத்தில் வெளியிட வேண்டும்.
தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காக சில சட்டத்தரணிகள் 05.08.2024 அன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
நடக்காத ஒன்றை நடந்தது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களை பிழையாக வழிநடாத்துகின்ற செய்தியாகும்.
இது தவிர வேறு ஒளி, ஒலி ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டுள்ளது எனவே இதனை கைவாங்கி மறுப்பு தெரிவிக்க வேண்டும்.
மேலும் இது குறித்த சட்டரீதியான நடவடிக்கைக்காக கோரிக்கை கடிதம் அனுப்ப தயார் நிலையில் உள்ளோம்.” என்றார்.
ஜனாதிபதி தேர்தல் ஆதரவு: கடும் எதிர்ப்பை வெளியிட்ட திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் திருகோணமலையில் கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். சீ. சபறுள்ளா தெரிவித்துள்ளார்.திருகோணமலை நீமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (06)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“இம்மாதம் ஒகஸ்ட் 5ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.இந்த செய்தியை வெளியிட்ட அதே நிறுவனம் எங்களது மறுப்பறிக்கையினை அதே முன் பக்கத்தில் வெளியிட வேண்டும்.தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காக சில சட்டத்தரணிகள் 05.08.2024 அன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.நடக்காத ஒன்றை நடந்தது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களை பிழையாக வழிநடாத்துகின்ற செய்தியாகும்.இது தவிர வேறு ஒளி, ஒலி ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டுள்ளது எனவே இதனை கைவாங்கி மறுப்பு தெரிவிக்க வேண்டும்.மேலும் இது குறித்த சட்டரீதியான நடவடிக்கைக்காக கோரிக்கை கடிதம் அனுப்ப தயார் நிலையில் உள்ளோம்.” என்றார்.