• Mar 14 2026

திருகோணமலை புத்தர்சிலை சட்டரீதியானது; சபையில் சஜித் புதுக்கதை!

shanu / Nov 18th 2025, 2:23 pm
image

திருகோணமலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலை சட்டரீதியாக பெளத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 



பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


1951 ஆம் ஆண்டு குறித்த விகாரை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 2010 ஆம் ஆண்டு பெளத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அதனை புனிதபூமியாக உறுதிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. 


இன்று அந்தப்பகுதியில் பல சிக்கல்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு வைக்கப்பட்ட புத்தர்சிலையை கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முனைந்திருக்கிறார்கள். புத்தர்சிலையை அகற்றுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது. 


தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் அந்த இடத்தில் புத்தர்சிலையை வைத்துள்ளார்கள். இதனை நான் தெரிவிப்பதற்குக் காரணம் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பௌத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற உரிய மதிப்பு, மரியாதை, கௌரவத்தை நாங்கள் நம்புகின்றோம். 


இந்தநிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தேசிய ஒருங்கிணைப்புக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதனை நாட்டின் ஜனாதிபதி செயற்படுத்த வேண்டும் - என்றார்.

திருகோணமலை புத்தர்சிலை சட்டரீதியானது; சபையில் சஜித் புதுக்கதை திருகோணமலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலை சட்டரீதியாக பெளத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1951 ஆம் ஆண்டு குறித்த விகாரை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 2010 ஆம் ஆண்டு பெளத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அதனை புனிதபூமியாக உறுதிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இன்று அந்தப்பகுதியில் பல சிக்கல்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு வைக்கப்பட்ட புத்தர்சிலையை கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முனைந்திருக்கிறார்கள். புத்தர்சிலையை அகற்றுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது. தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் அந்த இடத்தில் புத்தர்சிலையை வைத்துள்ளார்கள். இதனை நான் தெரிவிப்பதற்குக் காரணம் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பௌத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற உரிய மதிப்பு, மரியாதை, கௌரவத்தை நாங்கள் நம்புகின்றோம். இந்தநிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தேசிய ஒருங்கிணைப்புக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதனை நாட்டின் ஜனாதிபதி செயற்படுத்த வேண்டும் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement