• Aug 20 2026

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

dorin / Aug 19th 2026, 1:48 pm
image

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (18) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அரசாங்க அதிபர், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்த விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, எல்-நினோ தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், 2026/27 பெரும்போகச் செய்கைக்கான நெல், தானியங்கள் மற்றும் காய்கறிச் சாகுபடியின் முன்னேற்றங்கள் குறித்து நீர்பாசனத் துறை மற்றும் கமநல அபிவிருத்தித் துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. 

தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விவசாயம், மீன்பிடி, முந்திரி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளின் பங்களிப்புடன் சிறப்பு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 2026/2027 பெரும்போகச் செய்கைக்கான உர விநியோக திட்டம், விதை உற்பத்தி நிலவரம், தேங்காய் அபிவிருத்தி, விவசாயக் காப்பீடு மற்றும் நெல் கொள்முதல் திட்டங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

அத்துடன், விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, எதிர்காலச் செயல்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. டி.கே. சசிகுமார்,  மாவட்ட நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் (கி. மா) Eng ஜி. செந்தூரன், நீர்ப்பாசன திணைக்கள பிரதம Eng. டி.விவேக்சந்திரன், தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் Dr.எச். ஜி. எஸ். பிரேமரத்ன, விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் டபிள்யூ. பிரதீப் நிரோஷன் விஜயஸ்ரீ, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (18) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அரசாங்க அதிபர், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்த விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.அதனைத் தொடர்ந்து, எல்-நினோ தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், 2026/27 பெரும்போகச் செய்கைக்கான நெல், தானியங்கள் மற்றும் காய்கறிச் சாகுபடியின் முன்னேற்றங்கள் குறித்து நீர்பாசனத் துறை மற்றும் கமநல அபிவிருத்தித் துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விவசாயம், மீன்பிடி, முந்திரி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளின் பங்களிப்புடன் சிறப்பு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும் 2026/2027 பெரும்போகச் செய்கைக்கான உர விநியோக திட்டம், விதை உற்பத்தி நிலவரம், தேங்காய் அபிவிருத்தி, விவசாயக் காப்பீடு மற்றும் நெல் கொள்முதல் திட்டங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.அத்துடன், விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, எதிர்காலச் செயல்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. டி.கே. சசிகுமார்,  மாவட்ட நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் (கி. மா) Eng ஜி. செந்தூரன், நீர்ப்பாசன திணைக்கள பிரதம Eng. டி.விவேக்சந்திரன், தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் Dr.எச். ஜி. எஸ். பிரேமரத்ன, விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் டபிள்யூ. பிரதீப் நிரோஷன் விஜயஸ்ரீ, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement