• Sep 20 2024

தொல்லை கொடுத்த தந்தை ..! தாக்குதல் நடத்திய மகன் கைது...!samugammedia

Sharmi / Aug 24th 2023, 1:56 pm
image

Advertisement

குடா உடுவ தளம், மல்பெரி வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயது தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் தடியால் தாக்கி தந்தையை படுகாயப்படுத்திய மகன் கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தந்தை ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர், சந்தேகநபரான மகன் இருபத்தி இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியேறி நேற்றிரவு (23) வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த தந்தை 24ஆம் திகதி அதிகாலை  மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சந்தேகநபர் தந்தையின் கால்களிலும் கைகளிலும் தடியால் தாக்கியுள்ளார்.

இதில் கை, கால்கள் உடைந்து பலத்த காயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் சத்திரசிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொல்லை கொடுத்த தந்தை . தாக்குதல் நடத்திய மகன் கைது.samugammedia குடா உடுவ தளம், மல்பெரி வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயது தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் தடியால் தாக்கி தந்தையை படுகாயப்படுத்திய மகன் கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதலில் காயமடைந்த தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை, குறித்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.தந்தை ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர், சந்தேகநபரான மகன் இருபத்தி இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியேறி நேற்றிரவு (23) வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.காயமடைந்த தந்தை 24ஆம் திகதி அதிகாலை  மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சந்தேகநபர் தந்தையின் கால்களிலும் கைகளிலும் தடியால் தாக்கியுள்ளார்.இதில் கை, கால்கள் உடைந்து பலத்த காயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் சத்திரசிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement