• May 17 2024

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு! samugammedia

Chithra / Aug 24th 2023, 1:57 pm
image

Advertisement

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.

மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள், மத குருமார்கள் என அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டத்திற்கு செல்வோருக்கான இலவச வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

இவற்றை விட கொக்குத்தொடுவாய்  புதைகுழிக்குள் பலரைக் கொன்று குவித்துள்ளனர்.  இப் புதைகுழியானது சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்புடன் அகழ்வு செய்ய வேண்டும். எனவே சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் நாம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும்  பூரண ஆதரவளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

இதே வேளை கிழக்கு  மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு samugammedia சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள், மத குருமார்கள் என அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.போராட்டத்திற்கு செல்வோருக்கான இலவச வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.இவற்றை விட கொக்குத்தொடுவாய்  புதைகுழிக்குள் பலரைக் கொன்று குவித்துள்ளனர்.  இப் புதைகுழியானது சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்புடன் அகழ்வு செய்ய வேண்டும். எனவே சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் நாம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும்  பூரண ஆதரவளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.இதே வேளை கிழக்கு  மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement