• Jan 05 2025

மஸ்கெலியாவில் பார ஊர்தி குடை சாய்ந்து விபத்து - காயமடைந்த ஜவர் வைத்தியசாலையில்

Tharmini / Dec 30th 2024, 1:44 pm
image

பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று (30) நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து உள்ளது.

ராகலை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்து தரிசனம் முடித்து விட்டு திரும்புகையில் இவ் விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சிறிய ரக பார ஊர்தியில் பயணித்த மூன்று சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஸ்கெலியாவில் பார ஊர்தி குடை சாய்ந்து விபத்து - காயமடைந்த ஜவர் வைத்தியசாலையில் பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று (30) நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து உள்ளது.ராகலை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்து தரிசனம் முடித்து விட்டு திரும்புகையில் இவ் விபத்து ஏற்பட்டு உள்ளது.இந்த சிறிய ரக பார ஊர்தியில் பயணித்த மூன்று சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement