அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப், தனது நிதி நெருக்கடியை சமாளிக்க தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 10 மில்லியன் டொலர் மதிப்புடைய 1997 செஸ்னா ஜெட் விமானத்தை ஈரானிய-அமெரிக்க கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான மெஹர்தாத் மொயதியிடம் டிரம்ப் விற்பனை செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை இழந்தது முதல் டிரம்ப் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒரு சில வழக்குகளில் டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அடுத்தடுத்து தொடரப்படும் வழக்குகளால் டிரம்பின் பல தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமான இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள டிரம்புக்கு 800 கோடி வரை தேவைப்படும் என அவரது சட்ட நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க டிரம்ப் தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுவிட்டாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த ஜெட் விமானத்தை வாங்கிய மெஹர்தாத் மொயதி, கடந்த 2020 தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்துக்காக 2,45,000 டொலர் நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தனது சொத்துக்களை விற்கும் டிரம்ப். அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப், தனது நிதி நெருக்கடியை சமாளிக்க தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 10 மில்லியன் டொலர் மதிப்புடைய 1997 செஸ்னா ஜெட் விமானத்தை ஈரானிய-அமெரிக்க கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான மெஹர்தாத் மொயதியிடம் டிரம்ப் விற்பனை செய்துள்ளார்.ஜனாதிபதி பதவியை இழந்தது முதல் டிரம்ப் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒரு சில வழக்குகளில் டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் அடுத்தடுத்து தொடரப்படும் வழக்குகளால் டிரம்பின் பல தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமான இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள டிரம்புக்கு 800 கோடி வரை தேவைப்படும் என அவரது சட்ட நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க டிரம்ப் தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுவிட்டாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இந்த ஜெட் விமானத்தை வாங்கிய மெஹர்தாத் மொயதி, கடந்த 2020 தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்துக்காக 2,45,000 டொலர் நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.