• Jul 27 2024

வானிலை ஆய்வு மையம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை - மக்களே அவதானம்

Chithra / May 29th 2024, 2:11 pm
image

Advertisement

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின் பிரகாரம், குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் மீனவர்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் 2.5 – 3.5 மீற்றர் வரை எழலாம்.

இதன்காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

வானிலை ஆய்வு மையம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை - மக்களே அவதானம் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பின் பிரகாரம், குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.மேலும், மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் மீனவர்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் 2.5 – 3.5 மீற்றர் வரை எழலாம்.இதன்காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement