• Feb 14 2026

டிப்பர் வாகனத்துடன் பலமாக மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் கவலைக்கிடம்!

Chithra / Feb 14th 2026, 7:30 am
image

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தியில் இருந்து நிலாவரை நோக்கிச் செல்லும் வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 


அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் பலமாக மோதியுள்ளது.


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 


விபத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 


அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களைப் பொறுப்பேற்றதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


மோட்டார் சைக்கிளின் அதீத வேகமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டிப்பர் வாகனத்துடன் பலமாக மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் கவலைக்கிடம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தியில் இருந்து நிலாவரை நோக்கிச் செல்லும் வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் பலமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். விபத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களைப் பொறுப்பேற்றதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளின் அதீத வேகமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement