துருக்கியின் தலைநகரான அங்காராவில் அடுத்த வாரம் (ஜூலை 7-8) நடைபெறவிருக்கும் மிக முக்கியமான நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அட்லாண்டிக் கடந்த பாதுகாப்பு கூட்டணியில் (Transatlantic Alliance) பாரிய இராஜதந்திரப் பூகம்பம் வெடித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்குத் தனது ஐரோப்பிய நேட்டோ கூட்டணி நாடுகள் போதிய ஆதரவளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை நட்பு நாடுகள் மீது கடுமையான சொற்களால் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களுக்கு (Defense Spending) இடையிலான மிகப்பெரிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், நேட்டோ அமைப்பிற்கு வாஷிங்டன் வழங்கும் அசுரப் பங்களிப்பை "கேலிக்குரியது" மற்றும் "சமநிலப்பற்ற கேலிக்கூத்து" என்று விவரித்துள்ளார்.
ஐரோப்பாவின் முக்கிய அணுசக்தி வல்லரசுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து (UK) உள்ளிட்ட நட்பு நாடுகளைத் தனது பதிவில் தனித்துக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், “அவர்கள் எங்களுக்குத் துணையாக இருக்கவில்லை!!!” (They did not stand with us!!!) என்று அசுர ஆவேசத்துடன் x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் தனது பதிவில் பயன்படுத்திய நாடுகளின் சொந்த ஆயுதப்படைச் செலவினப் புள்ளிவிவரங்கள் 2025 ஆம் ஆண்டுக்கான நேட்டோவின் அதிகாரப்பூர்வத் தரவுகளுடன் ஒப்பிட்டும் போது அவை பெருமளவில் ஒத்துப்போவது உறுதியாகியுள்ளது.
துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடைபெறவிருக்கும் நேட்டோ மாநாட்டிற்கு முன்னதாக டிரம்பின் பதிவு வெளியாகியுள்ளது.
நேட்டோவை கேலிக் கூத்தாக்கிய டிரம்ப்- இங்கிலாந்து, பிரான்ஸை வெளுத்து வாங்கி அதிரடி துருக்கியின் தலைநகரான அங்காராவில் அடுத்த வாரம் (ஜூலை 7-8) நடைபெறவிருக்கும் மிக முக்கியமான நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அட்லாண்டிக் கடந்த பாதுகாப்பு கூட்டணியில் (Transatlantic Alliance) பாரிய இராஜதந்திரப் பூகம்பம் வெடித்துள்ளது.மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்குத் தனது ஐரோப்பிய நேட்டோ கூட்டணி நாடுகள் போதிய ஆதரவளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை நட்பு நாடுகள் மீது கடுமையான சொற்களால் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களுக்கு (Defense Spending) இடையிலான மிகப்பெரிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், நேட்டோ அமைப்பிற்கு வாஷிங்டன் வழங்கும் அசுரப் பங்களிப்பை "கேலிக்குரியது" மற்றும் "சமநிலப்பற்ற கேலிக்கூத்து" என்று விவரித்துள்ளார். ஐரோப்பாவின் முக்கிய அணுசக்தி வல்லரசுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து (UK) உள்ளிட்ட நட்பு நாடுகளைத் தனது பதிவில் தனித்துக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், “அவர்கள் எங்களுக்குத் துணையாக இருக்கவில்லை” (They did not stand with us) என்று அசுர ஆவேசத்துடன் x தளத்தில் பதிவிட்டுள்ளார்.டிரம்ப் தனது பதிவில் பயன்படுத்திய நாடுகளின் சொந்த ஆயுதப்படைச் செலவினப் புள்ளிவிவரங்கள் 2025 ஆம் ஆண்டுக்கான நேட்டோவின் அதிகாரப்பூர்வத் தரவுகளுடன் ஒப்பிட்டும் போது அவை பெருமளவில் ஒத்துப்போவது உறுதியாகியுள்ளது.துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடைபெறவிருக்கும் நேட்டோ மாநாட்டிற்கு முன்னதாக டிரம்பின் பதிவு வெளியாகியுள்ளது.