• Nov 14 2024

பிரித்தானியா அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு: ஜேடி வேன்ஸ் கருத்தால் சர்ச்சை

Shanthini / Jul 18th 2024, 3:51 pm
image

அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா எனஅமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். 

 

இந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்கிறார். வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு குடியரசுக் கட்சியில் போதுமான ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார்.

 

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.

 

 இந்நிலையில்கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ்,

அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்போதுமுதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும்ஆனால்உண்மையில்தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரித்தானியா தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரித்தானியா இருந்து வரும் நிலையில் ஜேடி வேன்ஸின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

எவ்வாறாயினும்இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரித்தானியாவின் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் (Angela Rayner), இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம் என விமர்ச்சித்துள்ளார்.


பிரித்தானியா அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு: ஜேடி வேன்ஸ் கருத்தால் சர்ச்சை அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.  இந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்கிறார். வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு குடியரசுக் கட்சியில் போதுமான ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ்,அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரித்தானியா தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரித்தானியா இருந்து வரும் நிலையில் ஜேடி வேன்ஸின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரித்தானியாவின் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் (Angela Rayner), இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம் என விமர்ச்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement