• Feb 26 2025

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் - வசமாக மாட்டிய இருவர்

Thansita / Feb 25th 2025, 8:57 pm
image

போதைப்பொருள்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை  பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட புறநகர்  பகுதியில் செவ்வாய்க்கிழமை (25)  அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இவ்  நடவடிக்கைகளின் போது  33,34 வயதுடைய  மருதமுனை பகுதியை சேர்ந்த 2  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசமிருந்து மொத்தமாக  1,690  மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

மேலும்  இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.எஸ். சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய  மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 அத்துடன்  கைதான  சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்ப்டையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.


பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் - வசமாக மாட்டிய இருவர் போதைப்பொருள்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை  பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட புறநகர்  பகுதியில் செவ்வாய்க்கிழமை (25)  அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்  நடவடிக்கைகளின் போது  33,34 வயதுடைய  மருதமுனை பகுதியை சேர்ந்த 2  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசமிருந்து மொத்தமாக  1,690  மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.மேலும்  இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.எஸ். சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய  மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது அத்துடன்  கைதான  சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்ப்டையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement