பழங்கால அகழ்வாராய்ச்சியில் இருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற மாணிக்கக்கற்கள் மற்றும் அரிய சிலைகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பரமங்கட பசறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 63 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டியதால் கிடைத்ததாகக் கூறப்படும் விலையுயர்ந்த 11 மாணிக்கக் கற்கள், செப்பு மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 4 சிலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பழங்கால அகழ்வாராய்ச்சியில் மீட்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களுடன் இருவர் கைது பழங்கால அகழ்வாராய்ச்சியில் இருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற மாணிக்கக்கற்கள் மற்றும் அரிய சிலைகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பரமங்கட பசறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 63 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டியதால் கிடைத்ததாகக் கூறப்படும் விலையுயர்ந்த 11 மாணிக்கக் கற்கள், செப்பு மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 4 சிலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.