• Jun 16 2024

திருமலையில் கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மூன்று நாட்களாக மாயம்..! தேடும் பணி தீவிரம்

Chithra / May 23rd 2024, 1:15 pm
image

Advertisement


திருகோணமலை - சல்லி பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்  இருவரை மூன்று நாட்களாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய  குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன்   என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 20 ஆம் திகதி காலை 10 மணியளவில் இவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்  கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை தேடி பத்துக்கும் மேற்பட்ட சல்லி பிரதேச மீனவர்கள்  சென்றுள்ளதாகவும்,

சம்பவம் தொடர்பில்  கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.


திருமலையில் கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மூன்று நாட்களாக மாயம். தேடும் பணி தீவிரம் திருகோணமலை - சல்லி பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்  இருவரை மூன்று நாட்களாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய  குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன்   என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 20 ஆம் திகதி காலை 10 மணியளவில் இவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்  கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.குறித்த மீனவர்களை தேடி பத்துக்கும் மேற்பட்ட சல்லி பிரதேச மீனவர்கள்  சென்றுள்ளதாகவும்,சம்பவம் தொடர்பில்  கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement