பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் மொரட்டுவை எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இரு நண்பர்களுக்கிடையே மோதல் - ஒருவர் குத்திக் கொலை பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட நபர் மொரட்டுவை எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது.கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.