• Oct 30 2024

மனச்சாட்சியற்ற விதத்தில் நடந்துகொள்ளும் இரு அமைச்சர்..! - சபையில் சபாநாயகர் சீற்றம் samugammedia

Chithra / Oct 20th 2023, 12:56 pm
image

Advertisement

 

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயும் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்கின்றனர் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் அரசமைப்பு பேரவைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று குரல் கொடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமவும் அதனை பின்பற்றி கருத்து தெரிவித்தார்.

இருவரும் 2022 இல் இடம்பெற்ற அரசியல் விடயங்கள் குறித்து குறிப்பிட்டனர்.

மக்கள் அவ்வேளை அமைப்பு முறை மாற்றத்தை கோரியதை சுட்டிக்காட்டினார்கள் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கோரிய அமைப்பு முறை மாற்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌவரமாக நல்லெண்ணத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என வேண்டுகோள்களும் உள்ளன என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு பேரவைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பேரவையின் உறுப்பினர்களின் வீடுகளை மக்கள் முற்றுகையிடவேண்டும் என கோருவது மக்களுடன் தாங்களும் இணைந்துகொள்வோம் என தெரிவிப்பது மனச்சாட்சிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள், ஒழுக்க நெறியற்ற செயற்பாடுகள் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


மனச்சாட்சியற்ற விதத்தில் நடந்துகொள்ளும் இரு அமைச்சர். - சபையில் சபாநாயகர் சீற்றம் samugammedia  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயும் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்கின்றனர் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.நீதியமைச்சர் அரசமைப்பு பேரவைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று குரல் கொடுத்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமவும் அதனை பின்பற்றி கருத்து தெரிவித்தார்.இருவரும் 2022 இல் இடம்பெற்ற அரசியல் விடயங்கள் குறித்து குறிப்பிட்டனர்.மக்கள் அவ்வேளை அமைப்பு முறை மாற்றத்தை கோரியதை சுட்டிக்காட்டினார்கள் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.மக்கள் கோரிய அமைப்பு முறை மாற்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌவரமாக நல்லெண்ணத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என வேண்டுகோள்களும் உள்ளன என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.அரசமைப்பு பேரவைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பேரவையின் உறுப்பினர்களின் வீடுகளை மக்கள் முற்றுகையிடவேண்டும் என கோருவது மக்களுடன் தாங்களும் இணைந்துகொள்வோம் என தெரிவிப்பது மனச்சாட்சிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள், ஒழுக்க நெறியற்ற செயற்பாடுகள் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement