• Nov 26 2024

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

Tharmini / Oct 26th 2024, 2:55 pm
image

கற்பிட்டி பாலக்குடா பகுதியிலிருந்து தலவில் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் தலவில் பகுதியிலிருந்து பாலக்குடா நோக்கி வருகைத் தந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு 9 மணியளவில் பாலக்குடா தலவில் பிரதான வீதியில் இடம்பெறூள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வயது சிறுமி உற்பட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கற்பிட்டி வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்ட இளைஞ்சர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் கற்பிட்டி தலவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய எஸ்.கே.சி ரனீஸ்க குரேரா என்ற இளைஞர் ஒருவரே உயிரிழந்தள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.




கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு கற்பிட்டி பாலக்குடா பகுதியிலிருந்து தலவில் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் தலவில் பகுதியிலிருந்து பாலக்குடா நோக்கி வருகைத் தந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று இரவு 9 மணியளவில் பாலக்குடா தலவில் பிரதான வீதியில் இடம்பெறூள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வயது சிறுமி உற்பட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன்போது கற்பிட்டி வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்ட இளைஞ்சர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தில் கற்பிட்டி தலவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய எஸ்.கே.சி ரனீஸ்க குரேரா என்ற இளைஞர் ஒருவரே உயிரிழந்தள்ளார்.குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement